கொழும்பு நடவடிக்கைக் குழுவும் (CAC) மற்றும் theSocialist.LK
காசாவில் மற்றும் மேற்குக் கரையில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய படுகொலைகளை நிறுத்துவதற்காக இலங்கை, இஸ்ரேல் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை உடனடியாக அழைக்கவும் அணிதிரட்டவும், கொழும்பு நடவடிக்கைக் குழுவும் (CAC) மற்றும் the Socialist.LKவும் நவம்பர் 19 அன்று, இலங்கை நேரப்படி 19:00 மணிக்கு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் மீது காட்டுமிராண்டித்தனமான படுகொலையை கட்டவிழ்த்து விட்டது, இது நாசிச படுகொலைகளை உலகிற்கு நினைவூட்டுகிறது. கிட்டத்தட்ட 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அக்டோபர் 07 முதல் நான்கு வாரங்களாக தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உள்ளான குடியிருப்பு கட்டிடங்கள், அகதிகள் முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் 25000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்கள் வீசப்பட்டுள்ளன, இது கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டின் இருமடங்காகும். சியோனிச ஆட்சியானது கூட்டு படுகொலையை, மொத்த அழிவை இலக்காகக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அதை ஆதரிக்கும் அமெரிக்க-நேட்டோ அமைப்பிற்கு எதிராக உறுதியாக நிற்க முன்வந்துள்ள உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் எதிரில் ஒரு முழு அளவிலான இனப்படுகொலை நடத்தப்படுகிறது. பொலிஸ் அடக்குமுறைக்கு மத்தியிலும், பொய்ப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, இந்தோனேசியா, மலிசியா மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் இனப்படுகொலையைக் கண்டித்து, உடனடி போர்நிறுத்தத்தைக் கோரி பேரணி நடத்தி வருகின்றனர். இதை ஐக்கிய நாடுகள் சபையின் 120 நாடுகளும் அங்கீகரித்தன. நெதன்யாஹு குண்டு தாக்குதலை நிறுத்தாத நிலையில். “தன்னைத் தற்காத்துக் கொள்ள” இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு “சிவப்புக் கோடுகள்” இல்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், அதை தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே செய்ய முடியும். அமெரிக்க-நேட்டோ நாடுகளிடமோ அல்லது வலிமையற்ற ஐ.நாவிடமோ செய்யும் எந்த முறைப்பாடுகளும் சியோனிச இன அழிப்புத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வராது. தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்கு வந்துள்ளது, ஆனால் அவர்கள் ஒரு புரட்சிகர அரசியல் வேலைத்திட்டம் மற்றும் தலைமைத்துவத்துடன் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும், இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் மட்டுமே வலியுறுத்துகின்றன: “போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான போர், மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கம்தான் வழிநடத்த வேண்டும்.”
CAC மற்றும் theSocialist.LK ஆகியவை ICFI முன்வைக்கும் முன்னோக்குகளுடன் நிற்கின்றன.
இந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது நெதன்யாகு அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்க-நேட்டோ கூட்டு மற்றும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் உலகெங்கிலும் உள்ள தேசிய அரசாங்கங்களுக்கும் எதிரான போராட்டமாகும்.
இலங்கையின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இஸ்ரேலின் பக்கம் நின்று, ஒருபுறம் ஏகாதிபத்தியத்திற்கான விசுவாசத்தை வெளிப்படுத்துவது, அதன் அடக்குமுறை சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக உள்நாட்டில் பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் தாக்குதல் நீண்டகால ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான வெகுஜனக் கிளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை இந்தியாவின் மோடியைப் போலவே விக்கிரமசிங்கவும் நன்கு அறிவார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச அடக்குமுறையின் வரலாற்று மற்றும் அரசியல் அடித்தளங்களுடன் கூடிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் வேலைத்திட்டம் குறித்து நிகழ்நிலை ஆன்லைன் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் நிற்பவர்களை கூட்டத்திற்கு அழைக்கிறோம்.
ஏகாதிபத்தியங்களின் இரட்டை அரசுப் பொறிமுறைக்கு எதிராக யூத-அரபு தொழிலாள வர்க்கத்தின் கூட்டு சோசலிச அரசு!
கொழும்பு நடவடிக்கை குழுவின் (CAC) பிரகடனம்
காசா பகுதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஒடுக்கப்பட்ட மக்களை சிறைபிடித்து, அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க மறுத்து, விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலிய அவசரகால தேசிய அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துங்கள். அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து முற்போக்காளர்களும் பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக அணிதிரட்டப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கடந்த 13ம் தேதி வடக்கு காசா பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது. இன்று (அக்.16) காலை நிலவரப்படி 500,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் மக்கள் மத்தியில் இராணுவத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. இதேவேளை அகதிகள் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. சுவாச இயந்திரங்களை இயக்க போதுமான எரிபொருள் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கின்றனர்.
நம் கண் முன்னே, நாஜிகள் செய்த குற்றத்திற்கு ஒப்பான ஒரு பெரிய குற்றம் அரங்கேற்றப்படுகிறது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், வேண்டுமென்றே பட்டினி மற்றும் நீர் அற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். காசாவிலுள்ள ஐ.நா.வின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர், “காசாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று விவரிக்கிறார். “நீர் என்பது உயிர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். காசாவில் தண்ணீர் தீர்ந்து வருகிறது. மேலும் காஸாவில் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது…. தாமதமாகுவதற்கு முன் காசா மீதான முற்றுகையை தவிர்க்க வேண்டும். எரிபொருள், தண்ணீர், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை உதவி நிறுவனங்கள் பாதுகாப்பாகக் கொண்டு வர முடியுமாயிருக்க வேண்டும். எங்களுக்கு இப்போது அது உடனடியாக தேவை,” என்று அவர் அறிவித்தார்.
இன்று வரையும் காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களால் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,600ஐத் தாண்டியுள்ளது. இந்த மிருகத்தனமான இனச் சுத்திகரிப்புக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தனது கடற்படையை மத்தியதரைக் கடலில் வைத்திருக்கிறது. ஒடுக்குமுறை இஸ்ரேலை இந்தியா போன்ற முதலாளித்துவ அரசுகள் மற்றும் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் ஆதரிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஆழமடைவதைக் கண்டு அஞ்சி, பாலஸ்தீனத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் தூண்டுதல்களை ஆரம்பித்தார்.
பிரதான விடயங்களை பார்க்கும் போது தெளிவாகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் பக்கம் நிற்கிறார்கள். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, “இஸ்ரேலிய பயங்கரவாதம்” மற்றும் “பாலஸ்தீன விடுதலை” என்ற வாசகங்கள் தாங்கிய போராட்டங்கள் வலுப் பெற்றன. ஹமாஸை ஆதரிப்பவர்களை கைது செய்யப் போவதாக பிரிட்டிஷ் காவல்துறையின் மிரட்டலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அடிபணியவில்லை. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் அனைத்து நாடுகளின் மக்களையும் கட்டுப்படுத்த முடியாது. வளைகுடா பகுதி பொதுமக்கள் போராட்டத்தால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து மத்திய கிழக்கை மாற்றியமைக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை நோக்கி சீராகச் செல்வதாக உறுதியளித்துள்ள சவுதி அரேபிய ஆளும் வர்க்கம், ஹமாஸைக் கண்டிக்கும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை. முதன்முறையாக, முஹமது பின் சல்மான் தனது பரம எதிரியான ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராசிக்கிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார்.
சொந்த மண்ணிலேயே கைதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு போராட்டத்தை தவிர வேறு வழியில்லை. செப்டம்பர் 19-26 தேதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபையில், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், “சமாதானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை, நீதியையும் மனிதாபிமான கொள்கைகளை மதிக்காதவர்களையும் எதிர்ப்பதன் மூலம் காலனிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயகத்தையும் நியாயமான உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று
அழைப்பு விடுத்தார். உண்மை, நீதி மற்றும் மனித விழுமியங்கள், காலனித்துவப் படையெடுப்பிலிருந்து நிலத்தை விடுவிக்க ஒரு மூலோபாயப் புரட்சி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். இந் நிலத்தில் இருந்து “இந்த கொடூரமான ஆக்கிரமிப்பை” அகற்றினாலன்றி பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வாய்ப்பில்லை. அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த கொடூரமான ஆக்கிரமிப்பை முடிவுக்கு வரவும், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் கூட்டு சோசலிச அரசை உருவாக்கவும் போராட வேண்டும்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் துணுக்குகளை பிற்போக்குவாதிகள் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.! ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் ஆதரவுடன் ஹமாஸ் போராளிகள், வலிமைமிக்க பாதுகாப்புப் படை என்று அறியப்பட்ட இஸ்ரேலை வரலாறு காணாத தாக்குதலுக்கு ஆளாக்க முடிந்தது. தொழில்துறை அதிகாரத்தில் மேலாதிக்க சக்தியான தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர எழுச்சியாக அது வெளிப்பட்டிருந்தால் நிலைமை எப்படி மாறியிருக்கும்?
1914 இல் நடந்த முதல் உலகப் போரின் போது யூத மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்தியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய போர் அமைச்சரவை செய்த சதித் திட்டத்தின் விளைவுதான் இன்று இருக்கும் இஸ்ரேல் அரசு. பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் ஆர்தர் பால்ஃபர் சியோனிஸ்ட் தலைவரான ரோஷெய்ல் சாமியிடம், 1917 ஆம் ஆண்டில், அப்போது ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ‘யூத மக்களுக்கான தேசமொன்றை’ அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எழுந்த மக்கள் எழுச்சிகளை நசுக்குவதும், ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைக்க இன மற்றும் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத் தேவையாக இருந்தது. 1948ல் பாலஸ்தீனத்தில் சியோனிச இஸ்ரேல் உருவானதும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே உத்தியின் விளைவுதான் என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று, முழு ஏகாதிபத்திய அமைப்பும் ஆழமாக வெடிப்புக்கு உள்ளாகும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் மூழ்கி மூன்றாம் உலகப் போருக்கான திட்டங்களுக்குத் திரும்புகிறது. அதனால்தான் இஸ்ரேலில் இந்த முரண்பாடுகளின் புதிய கட்டம் இப்போது உருவாகி வருகிறது. தொழிலாள வர்க்கம் சுதந்திரத்தை விரும்புகிறது, ஏகாதிபத்திய முதலாளித்துவம் அதை முற்றிலுமாகத் தகர்க்க விரும்புகிறது. அதனால்தான் பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது இஸ்ரேல் உட்பட ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தாலும் தவிர்க்க முடியாத ஒரு வர்க்கத் தேவையாகும்.
நான்காம் அகிலத்தின் சர்வதேச குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அதற்கு தேவையான தொழிலாள வர்க்க சர்வதேசிய முன்னோக்கு மற்றும் நடவடிக்கைகளை வளர்த்துக்கொண்டு போராட்டத்தில் நுழைந்துள்ளன. பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை பாதுகாப்பதற்காக முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஆதரவாக நிற்கும் கொழும்பு நடவடிக்கைக் குழு, அந்தப் போராட்டத்தைச் சுற்றி திரளுமாறு அனைத்து முற்போக்கு மக்களையும் கேட்டுக்கொள்கிறது.
எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்தை வலுப்படுத்த பொதுமக்களை அழைக்கிறோம்
நெதன்யாகு அரசுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள் வழங்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்துங்கள்!
காஸா முற்றுகையை உடனடியாக நீக்குங்கள்!
சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர், மருந்து, மின்சாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்குங்கள்!
பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்து!
சியோனிச ஆக்கிரமிப்புப் படைகளை அகற்று!
[இந்த அறிக்கை முதலில் சிங்களத்தில் அக்டோபர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டது]
தயாரிப்பு நிர்வாகம் மற்றும் ஒப்பனை: செல்வராஜ் லீலாவதி
நாடகப் பொருட்கள்: மு. நவநீதன்
தயாரிப்பு: தியேட்டர் மேட்ஸ் பண்பாட்டுக் கழகம்
வீதியில் அல்லது மேடையில் அரங்கேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்நாடகம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சித்தரிக்கிறது. இராணுவம், பொலிஸ், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் சில தொழிற்சங்கத் தலைவர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி ஜூலை 9 அன்று இதன் முதல் காட்சி இடம்பெற்றது. பின்னர் இந்த நாடகம் ஜூலை 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் கெர்க்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவு மற்றும் கெம்பியன் மேற்பிரிவு ஆகிய தோட்டங்களில் அரங்கேற்றப்பட்டது. மற்றும் எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்படவிருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நாடகம் நடத்தப்படுவதை புலனாய்வு வலையமைப்பின் ஊடாக அறிந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவப் பிரிவு அதிகாரி தமது தளத்தில் தாம் அறியாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று நாடக நெறியாளருக்கு தொலைபேசியில் அறிவித்தார். இன்னும் இதுபோன்ற பல தடைகளை நாடகக் குழுவினர் எதிர்கொண்டனர்.
நாடக இயக்குனர் லோகானந்தன்,தான் சந்தித்த இக்கட்டான சூழலை “என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஜூலை 9” என்ற தலைப்பில் முகப் புத்தகத்தில் பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.
“இந்த நாள்,நான் பிறந்து வளர்ந்த எனது சொந்த தோட்டத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினேன். கொட்டியாகலை மேற்பிரிவு எனது தோட்டம். பொகவந்தலாவ எங்களுக்கு அருகில் உள்ள நகரம். நாடகத்தை நான் எனது வாழ்வாக்கிக்கொண்டேன். அதற்கு விதை போட்டதே எனது கொட்டியாகலை தோட்டம்தான். மிகச்சாதரணமாக தொடங்கப்பட்ட இந்த நாடக நிகழ்வானது இறுதியில் பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் அடிப்பட்ட சமூகத்தின் எழுச்சியாக மாறிப்போனது. “லயத்துக் கோழிகள்” ஒரு வரலாற்று நிகழ்வாகிப் போனது. இந்த பதிவு நாடகத்தை பற்றியதல்ல. எங்கள் மக்களின் மனத்துணிவு பற்றியது. எங்களின் (நாடகக் குழுவின்) அர்ப்பணிப்புகளும் எதிர்ப்பார்ப்புகளும் நொறுங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த அதிசயம் சற்றென நிகழ்ந்தது. நாடகம் போடக்கூடாது என்று கடுந்தொனியில் கூறியவர்களை மிகச்சாதரணமாக கையாண்டார் எனது அருமை அண்ணா தனாஸ் அவர்கள். இவர் எங்கள் தோட்டத்தின் முன்னாள் போராட்டக்காரரான மரியசூசை மாமா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்காக என்னோடு தோள் நின்று உழைத்த என் அருமை தம்பிகள் பிரகாஷ் மற்றும் விமல்காந்த் ஆகியோரின் முயற்சியும் ஈற்றில் அவர்களின் தற்துணிவும் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த செயல் ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு பின்னர் அடம்பன் கொடிகள் திரள்வதை என் தொலைபேசி இதுவரை உறுதி செய்து கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறி தெரிகிறது. அன்றைய தினம் நாடகம் நடைபெறவில்லை என்பதை அறிந்து இருப்புக்கொள்ளாமல் தவித்து நின்றவர்கள்,நாடகம் நடைபெறுகிறது என்பதை அறிந்தவுடன் ஓடோடி வந்ததையும் நான் உணர்ச்சிப் பொங்க பார்த்து பூரிப்படைந்தேன். நாடக நிகழ்வுக்குப் பின்னர் என்னை ஆரத்தழுவி முத்தமிட்டவர்கள் எத்தனை பேர். அவர்கள் கண்களில் எத்தனை சந்தோசம். குழந்தைகளின் முகத்தில் எத்தனை சந்தோசம். இவர்களுக்காக நாங்கள் நாடகம் போட்டே ஆக வேண்டும். எங்கள் பயணம் இன்னும் தொடரும். ஒரு பெருங்கூட்டமாக நாங்கள் ஆர்ப்பரிப்போம்.”
மேலே குறிப்பிட்டுள்ள சூழலைப் பற்றி மட்டுமே நாம் நினைத்தாலும், வரலாற்று மாற்றத்தை தவிர்க்க முடியாமல் அழைக்கும் போராட்டத்தின் அடையாளமாக ‘லயத்து கோழிகள்’ உள்ளது. நாடகத்தின் அசாதாரண வடிவமும் இத்தகைய சமூகத் தேவையிலிருந்து எழுகிறது.
இது ஒரு கோழி திருட்டு பற்றிய கதை. முருகன் ஆண்டி (எம். அஜந்தன்) மற்றும் ஆண்டி முருகன் (அ. நவநீதன்) ஆகிய இருவரும் கோழி திருடர்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திருடுகிறார்கள். நாடு முழுவதும் கோழிகள் திருடப்பட்டு வருகின்றன, மக்கள் தங்கள் கோழிகளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க போராடுகிறார்கள். இந்தப் போர் ஏழை பெண் (எஸ். சீதேவி), அவரது இளம் மகன் (எஸ். வசீகரன்) மற்றும் அவர்களை ஆதரிக்கும் மற்றொரு பெண் (கலையரசி) ஆகிய மூவரால் சித்தரிக்கப்படுகிறது. நாடகத்தில் திருடர்களுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலை உயர்த்தி, ஏழை பெண் தனது கோழியை பராமரிக்கும் பொறுப்பை இளைய தலைமுறையை குறிக்கும் மகனிடம் ஒப்படைக்கிறாள். திருடர்கள் அவரிடம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றி கோழியைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள், ஆனால் தோல்வியுறுகிறார்கள், இறுதியாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கோழியைக் கடத்திச் செல்கிறார்கள். ஒரு மந்திரவாதி (எஸ். லீலாவதி) ஏகாதிபத்திய ஆடையை அணிந்து, கோழியை கைப்பற்ற நினைக்கும் இரண்டு திருடர்களின் போராட்டத்திற்கு நடுவராகி, கோழியின் வயிற்றில் இருந்து பணக்கட்டை இழுத்து அவற்றை தனது பையில் போட்டுக் கொள்கிறார். திருடர்கள் எடுப்பதற்காக சில நாணயங்கள் தரையில் வீசப்படுகின்றன. திருடர்கள் பேராசை கொள்கிறார்கள், மந்திரவாதி அவர்களிடம் இரண்டு தீப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு கோழியை எடுத்துச் செல்கிறார்.
அப்போது அந்த ஏழை, “நாங்கள் வாழ்நாள் முழுவதும் சேவலைத் தேடுகிறோம். ஆனால் உண்மையில் நாம் தொலைத்தது என்ன? அதுதான் எங்கள் வாழ்க்கை” என்று உறுதியான இதயத்துடன் அறிவிக்கிறார். வாழ்க்கையைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லாத அவள் உட்பட தொழிலாளி வர்க்கம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. “நாங்கள் எங்கள் உயிரை இழந்துவிட்டோம்,” என்று கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் ஒரு தொழிலாளி நாடகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் எங்களுக்கு முன் கூறினார். இந்த வார்த்தைகள் பொதுவாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிரொலிக்கும்.
இரண்டு திருடர்களும் ரகசியமாக ஒரே கோழியை திருட முயல்வது, கடைசி நேரத்தில் இந்த செயலில் பெண் தலையிட்டு திருடர்களின் நோக்கத்தை முறியடிப்பது, இது மீண்டும் மீண்டும் நடக்கிறது, கோழியை பாதுகாக்கும் பொறுப்பை இளைய தலைமுறை மகனிடம் ஒப்படைத்த பின் திருடர்களுக்கு இடையே போட்டி வலுக்கத் தொடங்குகிறது. லோகாநந்தன் வியத்தகு தருணங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனது படைப்பாற்றலை நிரூபித்தது மட்டுமல்லாமல், நாடகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
இரண்டு திருடர்களாக நடிக்கும் இரண்டு முக்கிய நடிகர்களின் நடிப்பு பாணி, அந்த கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையையும் எதிர்ப்பையும் கொண்டு வருகிறது, மேலும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கும் மற்றும் தங்கள் இரத்தமும் வியர்வையும் சார்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட தீய ஆளும் வர்க்க போக்குகள் காட்டப்படுகின்றன. இந்த நடிகர்களின் உடைகள், இசையமைப்பு, பாவனைகள் போன்றவற்றுக்கு மலையகக் கூத்து மரபைப் பயன்படுத்தி, தொழிலாளிகளின் வாழ்க்கையிலிருந்து விலகி கதாபாத்திரங்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் லோகானந்தன். மேலும், தொழிலாளிகளின் கோழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொத்தை சொந்தமாக வைத்து திருடர்களுக்கு அற்ப காசு கொடுக்கும் மந்திரவாதியின் உடைகளும் நடிப்பும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. யதார்த்தமான மற்றும் பகட்டான நடிப்பு மரபுகளின் போது யதார்த்தமான பாணிக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு தங்களை தாங்களே பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கூத்துகளில் பயன்படுத்தப்படும் தாளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் ஊடாகவும், மலையகத்தில் பயன்படுத்தப்படும் தப்பு இசைக் கருவியிலிருந்து எழுகின்ற இசையின் ஊடாகவும் தோட்டத் தொழிலாளர்களின் சூழலையும் அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதோடு எம்மையும் அதனோடு இரண்டற உறவு கொள்ள வைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய தொழிலாளர்கள் கடல் தாண்டி இலங்கையின் காடுகளின் வழியாக மலைகளுக்குச் செல்லும் கடினமான பயணத்தின் போது கொடிய விலங்குகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு தப்பு எனும் இசைக்கருவியை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடகம் தொழிற்சங்கங்கள் மற்றும் நேசவாத வலதுசாரி போலி-இடது முன்னணிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் அது பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் கீழ் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதால் தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனாலேயே, லயத்துக் கோழிகள் ஒரு யதார்த்தமான கலைப் படைப்பாகக் கருதப்படுகிறது, இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தூண்டும் ஒரு கலைப் படைப்பாகும்.
நாடகம் ஆரம்பம் முதல் இறுதிவரை வெளிப்படுத்தும் உணர்வுகள் வர்க்க இயல்புடையதாகவும், உழைக்கும் வர்க்கத்தின் மனநிலையைத் தூண்டுவதாகவும் இருப்பதால், தற்போதைய சமூக வளர்ச்சியின் வரலாற்றுத் தேவையைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பாகவும், படைப்பாளிக்கு என்ன சமூக நிலைமைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கு ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட இந்நாடக ஆசிரியரின் கூற்று நிறைவானதாகும். இலங்கையில் தற்போது இருநூறு வருட மலையக மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் எழுதப்படுகின்றன. கொண்டாட்டங்கள் ஊடாக தங்களைப் பற்றி சிந்திக்க அம்மக்கள் தூண்டப்படுகிறார்கள். கோவிட் எனும் தொற்றுநோய் பரவி கடந்த நான்கு வருடங்களில் வர்க்க சமூகத்தின் நெருக்கடிகள் அடக்க முடியாதவாறு தொடர்கின்றன. கொண்டாட்டங்களோடு மேற்கூறிய செயல்பாடும் மலையக மக்களின் உணர்ச்சியை தூண்டுகிறது. இதற்கிடையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹட்டன் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த இஷாலினி என்ற பள்ளிச் சிறுமி தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட 2021 ஜுலை சம்பவமும் இம்மக்களின் மனதைவிட்டு அகலவில்லை என்பதும் நாங்கள் இவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இருந்து தெரிய வருகிறது. இஷாலினி மலையக மக்களின் வாழ்க்கை விதியின் அடையாளம். கல்வி, வேலைவாய்ப்பு, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை சொற்பமாக பெற்றுக்கொண்டிருக்கும் தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பிள்ளைகள் போதைப்பொருளுக்கு ஆளாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களும், முதலாளித்துவ அரசியலும் ஏற்படுத்திய அவலங்களும், அவர்களின் வணிக தந்திரோபாயங்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்குவதும் பிரச்சனையாகி விட்டது. இதற்கிடையில், நிலையற்ற முதலாளித்துவ அரசாங்கங்கள் எந்தவொரு ஜனநாயக உரிமையையும் தாக்குவதில் உறுதியாக உள்ளன. வாழ்க்கை நிலைமைகளின் கொடூரமான வீழ்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில், தங்கள் பெற்றோர்களுக்காக அவர்களின் பிள்ளைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள் எனினும் அவை தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன. தோட்டத்தில் பிறந்து தோட்டத்தில் வளர்ந்த உண்மையான கலைஞனால் இந்த சமூகத்தில், இவற்றை சகித்துக் கொண்டு இருக்க முடியாது.
இந்த கசப்பான உண்மையை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் மற்றும் கொடுங்கோல் ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமான நடிகையான எஸ். லீலாவதியின் மந்திரவாதி பாத்திரம் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அவரது அற்புதமான நடிப்பால் நாடகம் உச்சம் அடைகிறது. குறிப்பாக, தான் நடிப்பு கலையில் தேர்ச்சி பெற்ற நடிகை என்பதை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்ட சமூகத் தேவையைப் புரிந்துகொண்டு கருத்து ரீதியாக மீண்டும் உருவாக்கி, நடிப்பில் தனித்து நின்றார். ஏழைப் பெண்ணாக நடித்த எஸ். சீதேவியின் கதாபாத்திரம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருடர்களாக செயல்பட்ட எம். அஜந்தன் மற்றும் எம். நவநீதன் ஆகியோர் லீலாவதி செய்த சாமர்த்தியத்தை அடைந்து கொள்ள முடியும் என்பதும், பாத்திரங்களின் சமூகச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தமது ஆற்றலை இன்னும் சீர்படுத்துவதன் மூலமும், நாடகத்தை இன்னும் தரமுயர்த்த முடியும் என்பது தெளிவாகிறது. பயிற்சிப் பருவத்தினரான எஸ். வசீகரன் வசனங்களை வெளிப்படுத்துவதில் காட்டிய திறமையை உடல்மொழியிலும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
நவநீதனின் நாடகப் பொருட்கள் சிறப்பாக உள்ளன. சேவல், கூடு மற்றும் உபயோக பொருட்கள் குறிப்பாக துப்பாக்கியினை ஒரு பொம்மையாக தெளிவாகக் காணக்கூடிய வகையில், நாடகத்தின் கருப்பொருளுக்கு சக்திவாய்ந்த முக்கியத்துவம் கொடுக்க அவர் பங்களித்திருக்கிறார்.
இவ்வாறான ஆக்கங்களைத் தடுக்க ஆளும் வர்க்கம் அண்மையில் எடுத்த ஒரு நடவடிக்கை, கலைஞை நடாஷா எதிரிசூரியவை ஒரு கலைப் படைப்புக்காக கைது செய்தமையாகும்.1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கம் கலைக்கு எதிராக வலுவான தாக்குதலைத் தொடுத்தது. அன்று முதல் வேட்டையாடப்பட்ட கலைஞர்கள் ஏராளம். பல வருடங்களுக்கு முன்னர் பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகம் தேசிய மட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தெரிவானதையடுத்து, சமூக பிரச்சினைகள் சார்ந்த நாடகங்களை மாணவர்கள் உருவாக்குவதை தடை செய்து, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, புராதன கதைகளை அல்லது அவற்றை புதிய வடிவில் படைப்பதற்கு மட்டுமே மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உரையாடல் செந்தமிழில் இருப்பது கட்டாயமாகும். நாடக போட்டி நடுவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்படி, ‘நாடகத்தில் அரசியல் கருத்துகளுக்கு தடை’, ‘மதங்களை இழிவுபடுத்தக் கூடாது,’ போன்றவை அடங்கியுள்ளன.
அதுபோலவே உலகெங்கிலும் உள்ள அரசுகள், கலை, கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்துகொள்வதில்லை. கலைச் சுதந்திரத்திற்காக முதலாளித்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர்கள் மட்டும் கலை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உடனடியாக இறங்கலாம். சமூக யதார்த்தத்துடன் தொடர்பில்லாத ஒரு கலை எந்த வகையிலும் சிறந்த கலாச்சார முன்னேற்றத்திற்கு உதவாது. இதன்மூலம், சமூக வளர்ச்சியின் பயனை ஏற்றுக்கொண்ட உண்மையான கலையை, ‘லயத்து கோழிகள்’ நாடகத்திற்கு எதிரான இயக்கத்தை தோற்கடித்த உழைக்கும் வர்க்க சக்தியின் வேகத்தை பாதுகாக்க முன்முயற்சி எடுக்க முடியும். அதன்படி, தொழிலாளர் போராட்டக் குழுக்களில் ஒரு மக்கள் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கி, அனைத்து பிரிவுகளையும் தாண்டி, சகோதரத்துவத்தின் கரத்தை நீட்டுவது இன்றைய கலைஞர்களின் தலையாய சமூகப் பொறுப்பாகும். லோகானந்தன் குறிப்பிடுவது போல் நாங்கள் பெரும் கூட்டமாக ஆர்ப்பரிக்க வேண்டும்.
[இந்தக் கட்டுரை முதலில் சிங்களத்தில் ஜூலை 20, 2023 அன்று வெளியிடப்பட்டது]
மார்ச் 11 அன்று வலைப்பதிவாகத் தொடங்கி புரட்சிகர அறிவை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்த TheSocialist.LK – Global Socialist Reviews என்ற இணைய வெளியீடு இன்று (25) இணையத்தளமாகத் தொடங்கப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச தரநிலை வடிவத்தில் மேம்படுத்தப்பட்டு, அரசியல், பொருளாதாரம், வர்க்கப் போராட்டம், வரலாறு, கலை-கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பரந்த அளவிலான, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் அறிவைக் கொண்டு வர சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மும்மொழி இணையதளமாக தயார்படுதத்ப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமான இலங்கை மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும், சர்வதேசத்தால் வழிநடத்தப்படும் சோசலிசப் புரட்சிக்கு முறையாகப் பயிற்றுவித்து அவர்களைத் தயார்படுத்தும் தளமாக theSocialist.LK இணையதளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். சுமார் இரண்டு மாதங்கள், வலைப்பதிவு மூலம், தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து சர்வதேச அரசியல்-பொருளாதார அனுபவத்தை உங்களுக்கு பகுப்பாய்வு ரீதியில் கொண்டு வர உழைத்தோம். இந்த குறுகிய காலத்தில் வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட கட்டுரைகளின் எண்ணிக்கை 66. நாளுக்கு நாள் அது பெற்ற வாசகர்களின் ஈர்ப்பு, ஊடுருவும் புதிய அறிவைத் தேடுவதற்கான புறநிலை உந்துதலுக்கு சாட்சியமளித்தது சமூக யதார்த்தமாகும். இது புரட்சிகர அரசியலுக்கு ஊக்கமளிக்கிறது.
தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் உண்மையான புத்திஜீவிகளுக்கு ஜனநாயக ரீதியாக விவாதிக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தை நசுக்க ஆயுதம் ஏந்திய முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்த்தாக்குதலைத் தயாரித்து ஒருங்கிணைக்கவும் சுதந்திரமான ஊடகங்கள் தேவை. . அவர்கள் கேட்பதற்கும், வினவுவதற்கும், தேடுவதற்கும், கண்டுபிடிப்பதற்கும், சொல்லவும் எழுதவும் நிறைய இருக்கிறது. உழைக்கும் மக்களின் போராட்டங்களின் ஒற்றுமைக்கு எது பொருத்தமானது என்பதை நம்பகத்தன்மையுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை. அந்த வகையில், theSocialist.LK என்பது வர்க்கத் தேவையின் விளைபொருளாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் WSWS ஆகியவற்றின் இயங்கியல் பொருள்முதல்வாத முறை, பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் theSocialist.LK, தேசிய மற்றும் சர்வதேச உழைக்கும் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமைக்காக நிற்கும். ஸ்டாலினிசத்தை முன்னிறுத்தி சந்தர்ப்பவாத அரசியலால் அழிக்கப்பட்ட சோசலிச கலாச்சாரத்தை மீட்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள உறுதியான வேலைத்திட்டத்திற்கு இணங்க அதன் பணியைத் தொடரக் கடமைப்பட்டுள்ளது.
பெரும் மந்தநிலைக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் ஆழமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏகாதிபத்திய அமைப்பு, மனிதகுலத்தை அணுசக்தி உலகப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோவால் தொடங்கப்பட்ட பினாமி யுத்தம். ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான பிரதிநிதித்துவம் ஆகும். உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த பொருளாதாரமான சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் முழு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தையும் பேரழிவுப் போரின் பிடியில் கொண்டு செல்கின்றன. உலகெங்கிலும் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுக்கக்கூடிய தொற்றுநோய்க்கு பலியாவதை மேற்பார்வையிட்ட ஆளும் வர்க்கங்கள், பிணங்களை குவிப்பதை ஒரு ஆசீர்வாதமாக மாற்றியவர்கள், உழைக்கும் மக்களிடமிருந்தும் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்தும் போரின் செலவைப் பிரித்தெடுக்கின்றனர்.
போரும் சிக்கனமும் முடிவுக்கு வர வேண்டும். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், உழைக்கும் வெகுஜனங்களின் நனவான புரட்சிகர உலகளாவிய இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். அது அந்தந்த தேசிய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட வேண்டும். லியோன் ட்ரொட்ஸ்கி அற்புதமாக பகுப்பாய்வு செய்தது போல், “சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, மேலும் உலக அரங்கில் நிறைவு பெறுகிறது.”
தற்போதைய நெருக்கடிக்கு வழி வகுத்துள்ள சமூக-பொருளாதார இயக்கவியலைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த உண்மைகள் உறுதி செய்கின்றன. அர்ப்பணிப்புக்குக் குறைவான எதுவும் தற்போதைய வர்க்கப் போராட்டங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்காது. அதன் எதிரிகள் அனைவரையும் இரக்கமற்ற முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகிறது theSocialist.LK, நாங்கள் அந்த பொறுப்பை ஏற்கிறோம்.
இணையத்தளத்தை தவறாமல் படித்து, உங்கள் கருத்துக்களை அனுப்புமாறும், அத்தியாவசிய அரசியல் விவாதங்களுக்கான திறந்தவெளியில் எங்களுடன் இணையுமாறும், இணையதளத்திற்கு உங்களின் அதிகபட்ச நிதியுதவியை வழங்குமாறும் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
[இந்த அறிக்கை முதலில் 25 மே 2023 அன்று சிங்களத்தில் வெளியிடப்பட்டது]

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டேவிட் நோர்த்தின் வெளிவரவிருக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலிற்கான முன்னுரை இதுவாகும். நோர்த், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும் ஆவார்.
இந்தப் புத்தகத்தின் அச்சுப் பதிப்பும் மின்புத்தகமும் (epub) 30 ஜூன் 2023 அன்று வெளியிடப்படும். இதை ஏப்ரல் 6 ஆம் திகதி மெஹ்ரிங் புக்ஸில் (Mehring Books) முன்பதிவு செய்யவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
***
இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைப் படைப்புகள் கடந்த நாற்பது ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டவையாகும். லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் என்ற முதல் கட்டுரையானது ஆரம்பத்தில் 1982 ஆண்டின் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற நாடுகளிலுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நிறுவப்பட்ட ஒரு இளைஞர் அமைப்புக்கு 2023 பெப்ரவரியில் எழுதப்பட்ட ஒரு கடிதம் நூலின் கடைசி ஆவணமாகும்.
முதல் மற்றும் இறுதி ஆவணத்துக்கும் இடையில் பல ஆண்டு கால இடைவெளி இருந்தபோதிலும், அவைகள் ஒரு மைய ஆதாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன: அதாவது, லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த ஆளுமைமிக்க தலைவராக இருந்ததுடன், அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது. வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடத்தையும் அவரது நீடித்த அரசியல் முக்கியத்துவத்தையும் குறித்த இந்த மதிப்பீடானது கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்வுகளால் சக்திவாய்ந்த முறையில் வலிமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ராலினிசம் ஒரு எதிர்ப்புரட்சிகர சக்தி என்ற ட்ரொட்ஸ்கியின் கண்டனம், வரலாற்றால் நிரூபணமாகியுள்ளது என்ற உண்மையிலிருந்து நாம் ஆரம்பிப்போம். இருப்பினும், முதல் கட்டுரை எழுதப்பட்ட காலத்தில், சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பாவில் அதனுடன் இணைந்திருந்த ஸ்ராலினிச ஆட்சிகளும் நீடித்து இருந்தன. கிரெம்ளின் அதிகாரத்துவத்துடன் இணைந்திருந்த ஸ்ராலினிச அரசியல் கட்சிகள் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுடன் தற்பெருமை கொண்டிருந்தன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபிக்கும், மற்றும், அந்த ஆட்சியின் அழுகிய கட்டமைப்பானது தேசிய பொருளாதார தன்னிறைவு, தகுதியின்மை மற்றும் பொய்களின் சுமையின் கீழ் தகர்த்துவிடும் என்று ட்ரொட்ஸ்கி முன்கணித்தார். அதிகாரத்துவத்தை ‘உண்மையான தற்போதைய சோசலிசம்’ என்று கூறிய அரசியல் வக்காலத்து வாங்கிகள் பலரால் இந்த முன்கணிப்பு ‘ட்ரொட்ஸ்கிச குறுங்குழுவாதம்’ என்றும் ‘சோவியத்-விரோத பிரச்சாரம்’ என்றும் கூட நிராகரிக்கப்பட்டது.
லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் என்ற கட்டுரை, சரியாக நீண்ட கால மற்றும் மிகவும் முதுமையடைந்திருந்த சோவியத் தலைவரான லியோனிட் பிரெஷ்னேவ், தனது நோய் படுக்கையிலிருந்து செஞ்சதுக்கத்தில் உள்ள கிரெம்ளின் சுவர் சமாதிக்குச் சென்றது வரையான மாதங்களிலேயே எழுதப்பட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் தலைமைப் பதவியை முதலில் யூரி ஆண்ட்ரோபோவிற்கும் பின்னர் கான்ஸ்டான்டின் செர்னெங்கோவிற்கும் மாற்றியது. அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் முன்னோடிகளுடன் கிரெம்ளின் சுவர் சமாதியில் சேர்ந்து கொண்டார்கள். இறுதியாக, 1985 மார்ச் மாதம் மிக்கைல் கோர்பச்சேவிடம் பதவி ஒப்படைக்கப்பட்டது.
சோவியத் வரலாற்றை கற்பதில் ஒரு புதிய ‘வெளிப்படைத்தன்மை’ [glasnost] சம்பந்தமாக கோர்பச்சேவின் வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராகவும் அக்டோபர் புரட்சியை அது காட்டிக் கொடுத்தற்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த போராட்டத்தை கிரெம்ளின் தொடர்ந்து கண்டனம் செய்தது.
1987 நவம்பரின் பிற்பகுதியில், ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கோர்பச்சேவ் அக்டோபர் புரட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரையில், ஸ்ராலினை நியாயப்படுத்தலையும் ட்ரொட்ஸ்கி மீதான விஷமத்தனமாக கண்டனத்தையும் உள்ளடக்கிக்கொண்டார். ஆனால் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டது போல், வரலாற்றின் விதிகள் அதி சக்திவாய்ந்த பொதுச் செயலாளரை விட மிகவும் சக்திவாய்ந்தவை என்பதை நிரூபித்தது என்றார்.
கோர்பச்சேவின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை புணருத்தாரனம் செய்வதை இலக்காகக் கொண்டவை என்று முன்கணித்து, எச்சரித்த ஒரே அரசியல் போக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே ஆகும். 1987 ஆண்டு மார்ச் மாதத்திலேயே, புதிய சோவியத் தலைவரின் ‘கோர்பிமேனியா’ என்று அழைக்கப்படும் உலகளாவிய போற்றிப் புகழுதலுக்கு மத்தியில், அனைத்துலகக் குழு இவ்வாறு எச்சரித்தது:
சோவியத் ஒன்றியத்திலுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச அளவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் ஆகிய இரு சாராருக்கும், கோர்பசேவின் சீர்திருத்தக் கொள்கை எனப்படுவது ஒரு கபடத்தனமான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது அக்டோபர் புரட்சியின் வரலாற்று வெற்றிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், உலக அளவில் ஏகாதிபத்தியத்துடனான அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதோடு பிணைந்துள்ளது.[1]
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 இல், பெரெஸ்ட்ரோயிகா எதிர் சோசலிசம் என்ற தலைப்பில் கோர்பச்சேவின் கொள்கைகள் பற்றிய பகுப்பாய்வில், நான் இவ்வாறு எழுதினேன்:
கடந்த மூன்று ஆண்டுகளில், உற்பத்தி சக்திகளின் தனியார் உடைமையை ஊக்குவிக்க கோர்பச்சேவ் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதிகாரத்துவமானது முற்றிலும் முதலாளித்துவ வழியில் ஒழுங்கமைக்கப்பட்ட சோவியத் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியுடன் முன்னெப்போதையும் விட வெளிப்படையாக தனது நலன்களை அடையாளப்படுத்தி வருகிறது. இவ்வாறாக, அதிகாரத்துவத்தின் சொந்த சலுகைகள் இனியும் அரசுச் சொத்துடைமையின் வடிவங்களுடன் பிணைக்கப்படாமல், விரோதமாக இருக்கும் அளவிற்கே, உலக ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவுகள் அதற்கேற்ப மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். சோவியத் வெளியுறவுக் கொள்கையின் பிரதான குறிக்கோளான, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பது என்பது மேலும் மேலும் குறைந்து கொண்டே வருவதுடன், அதற்கு மாறாக, பெரெஸ்ட்ரோய்காவின் (மறுசீரமைத்தல்) உள்நாட்டு இலக்குகளை அடைவதற்காக, அதாவது சோவியத் ஒன்றியத்திற்குள் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை அபிவிருத்தி செய்வதன் பேரில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஏகாதிபத்திய ஆதரவை அணிதிரட்டுவது இடம்பெறுகின்றது. இவ்வாறாக, தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினிச தத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர தர்க்கமானது சோவியத் அரசு சொத்துக்களை கீழறுப்பதையும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதில் அதனுடைய இறுதி வெளிப்பாட்டைக் காண்கின்றது.[2]
அடுத்து வந்த நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட கோர்பச்சேவின் கொள்கைகள் குறித்த இந்த மதிப்பீட்டிற்கான தனிச்சிறப்புவாய்ந்த பெருமையை நான் கோர முடியாது. அனைத்துலகக் குழுவின் முன்னோக்கானது அரை நூற்றாண்டுக்கு முன்னர், ட்ரொட்ஸ்கி தனது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலில் சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் மற்றும் ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சிகர பாதை குறித்து செய்திருந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக, சோவியத்துக்குப் பிந்தைய முதலாளித்துவ மீட்பு நிகழ்வுப்போக்கு குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரிதலானது, ட்ரொட்ஸ்கி முன்கணித்த வழியிலேயே அது இடம்பெற்றது என்ற உண்மையால் எளிதாக்கப்பட்டது.
‘மனிதகுலத்தின் கருத்தியல் பரிணாம வளர்ச்சியின் இறுதிப் புள்ளி மற்றும் சிவில் அரசாங்கத்தின் இறுதி வடிவமாக மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தின் உலகமயமாக்கல்’ என்று ராண்ட் கார்ப்பரேஷன் (Rand Corporation) பகுப்பாய்வாளரான பிரான்சிஸ் ஃபுகுயாமா முன்னறிவித்து வரையறுத்ததைப் போல், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ‘வரலாற்றின் முடிவின்’ விளைவு அல்ல.[3] அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவார் என ஃபுகுயாமா எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.
உண்மையில், சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்யாவிலோ அல்லது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலோ இடம்பெற்ற அபிவிருத்திகள், ராண்ட் சிந்தனைக் குழுவினரால் உருவாக்கப்பட்ட கற்பனைகளை ஒத்திருக்கவில்லை. ரஷ்யாவிற்குள், முதலாளித்துவத்தின் மீட்சியை நியாயப்படுத்திய அனைத்து நம்பிக்கைக்குரிய முன்கணிப்புக்களும் நிகழ்வுகளால் நிராகரிக்கப்பட்டன. செழிப்பிற்குப் பதிலாக, முன்னாள் சோவியத் அதிகாரத்துவத்தினருக்கும் ஏனைய குற்றவியல் சக்திகளுக்கும் அரச சொத்துக்களை தீ வேகத்தில் விற்றுத் தள்ளியதால், பாரிய வறுமையும் திகைப்பூட்டும் சமூக சமத்துவமின்மையும் உருவாகியது. ஜனநாயகம் மலர்வதற்கு ஊக்கமளிப்பதற்குப் பதிலாக, புதிய ரஷ்ய அரசு விரைவாக ஒரு தன்னலக்குழு ஆட்சியின் வடிவத்தை எடுத்தது. அக்டோபர் புரட்சியுடனான அதன் வரலாற்றுத் தொடர்பை ரஷ்யா மீளமுடியாத வகையில் நிராகரித்துவிட்டதால், அது, அதன் புதிய ‘மேற்கத்திய பங்காளிகளால்’ மென்மையான அரவணைப்புகளுடன் வரவேற்கப்படுவதுடன் முதலாளித்துவ நாடுகளின் சகோதரத்துவத்துடன் அமைதியாக ஒருங்கிணைக்கப்படும் என்ற வலியுறுத்தலானது, அனைத்து முன்கணிப்புகளிலும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டதும் யதார்த்தமற்றதும் ஆகும் என்பதை நிரூபித்தது.
பிரதான ஏகாதிபத்திய நாடுகளுக்குள், சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளான, கடந்த மூன்று தசாப்தங்களை குணாம்சப்படுத்தப்படுத்திய பொருளாதார, பூகோள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளின் தொடர்ச்சி, ஒரு உலக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தை அதன் அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள் குறித்த மார்க்சிச பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளன. 1938ல் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமானது, வரலாற்று சகாப்தத்தை முதலாளித்துவத்தின் ‘மரண ஓலம்’ என்று வரையறுத்ததுடன், தற்போதைய நிலைமையை பற்றி முன்கூட்டியே இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தின் தறுவாயிலேயே பின்வருமாறு விவரித்துவிட்டது:
மனித குலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கமடைகின்றன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் மேம்பாடுகளும் பொருள் செல்வத்தின் மட்டத்தை உயர்த்தத் தவறிவிடுகின்றன. முழு முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஒருங்கிணைந்த நெருக்கடிகள் வெகுஜனங்கள் மீது முன்னெப்போதையும் விட கடுமையான இழப்புகளையும் துன்பங்களையும் திணிக்கின்றன. பெருகிவரும் வேலையின்மையும், அதையொட்டி, அரசின் நிதி நெருக்கடியை ஆழப்படுத்துவதோடு நிலையற்ற பண அமைப்பு முறைகளைக் கீழறுக்கிறது. …
முதலாளித்துவ சிதைவின் அதிகரித்து வரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய பகைமைகள் ஒரு முட்டுக்கட்டையை அடைகின்றன, அதன் உச்சத்தில் தனித்தனி மோதல்கள் மற்றும் இரத்தம் தோய்ந்த உள்ளூர் குழப்பங்களும் ஏற்படுகின்றன … தவிர்க்கவியலாமல் இவை உலகப் பரிமாணங்களிலான மோதலாக ஒன்றிணைய வேண்டும். முதலாளித்துவ வர்க்கம், நிச்சயமாக, ஒரு புதிய போரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதன் மேலாதிக்கத்திற்கு ஏற்படக்கூடிய மரண ஆபத்தை அறிந்திருக்கிறது. ஆனால் அந்த வர்க்கமானது 1914க்கு முந்தைய காலத்தை விட இப்போது ஒரு போரை தவிர்ப்பதில் அளவிடமுடியாத இலாயக்கற்று இருக்கின்றது.[4]
தற்போதைய உலக நிலைமையானது எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ட்ரொட்ஸ்கியால் மிகவும் கூர்மையாக விவரிக்கப்பட்டவற்றுடன் ஒரு ஆபத்தான ஒத்திருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. உலக நிலைமை பற்றிய அவரது புரிதலானது முதலாளித்துவத்தின் நெருக்கடியின் மூலத்தைக் குறித்த அவரது பகுப்பாய்விலிருந்து பெறப்பட்டதாகும்: 1) சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையிலான மோதல்; மற்றும் 2) முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையானது உலகப் பொருளாதாரத்தின் புறநிலை வளர்ச்சியுடன் பொருந்தாத தன்மை. முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள், இந்த முரண்பாடுகளிலிருந்து எழும் நெருக்கடியானது பாசிச மிலேச்சத்தனம், உலகப் போர் ஆகிய இரட்டை பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லுகின்றன.
பூகோள முதலாளித்துவத்தின் அபாயகரமான இயக்கவியல் குறித்த தனது பகுப்பாய்வில், ட்ரொட்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்திற்கு மைய முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 1928 இல், (ஸ்ராலினிச ஆட்சியால் அவர் நாடுகடத்தப்பட்டிருந்த) மத்திய ஆசியாவிலுள்ள தொலைதூர அல்மா அட்டாவிலிருந்து அவர் இவ்வாறு எழுதினார்:
நெருக்கடிக் காலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கமானது எழுச்சிக் காலத்தை விட இன்னும் முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே இது நிகழ்கிறதா, அல்லது இது அமைதியான முறையில் அல்லது போரின் மூலம் நடைபெறுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், பிரதானமாக ஐரோப்பாவின் செலவிலேயே அமெரிக்கா தனது இடர்பாடுகள் மற்றும் நோய்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும்.[5]
1934ல் ட்ரொட்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையை இன்னும் கூர்மையான சொற்களில் விவரித்தார்:
1914ல் ஜேர்மனியைப் போர்ப் பாதைக்குத் தள்ளிய அதே பிரச்சினைகளுக்கு எதிராக அமெரிக்க முதலாளித்துவம் எழுந்து நிற்கிறது. உலகம் பங்கீடு செய்யப்பட்டுள்ளதா? அதை மறுபங்கீடு செய்ய வேண்டும். ஜேர்மனியை பொறுத்தவரை அது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது’ குறித்த பிரச்சினையாக இருந்தது. அமெரிக்காவானது உலகை ‘ஒழுங்கமைக்க’ வேண்டும். வரலாறானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புக்கு நேருக்கு நேர் மனிதகுலத்தை கொண்டு வருகிறது.[6]
தனது சூறையாடும் கொள்கைகளை மனிதாபிமான சொற்றொடர்களைக் கொண்டு புனிதப்படுத்தும் அமெரிக்காவின் விருப்பத்தை ட்ரொட்ஸ்கி கேலி செய்தார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஜனாதிபதி வூட்ரோ வில்சனை அவர் ‘பிலிஸ்தீனர் (போர் விரும்பி) மற்றும் பாசாங்குகாரர்’, ‘இரத்தத்தில் நனைந்த ஐரோப்பாவை அறத்தின் உன்னத பிரதிநிதியாக புணைந்துகாட்டும் ‘நயவஞ்சகர்’, ‘அமெரிக்க டொலரின் மீட்பர்’; தண்டிப்பது, மன்னிப்பது மற்றும் மக்களின் தலைவிதியை ஒழுங்குபடுத்துவதையும் செய்பவர்’ என்று விவரித்தார்.”[7] இப்போது வில்சனின் வக்கிரமான இனவாதம் நன்கு அறியப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக தாராளவாதத்தின் சின்னமாக நீண்ட காலமாக புகழப்பட்ட ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி குறித்த ட்ரொட்ஸ்கியின் விளக்கம், கல்விசார் சமூகத்தின் ஒருமித்த கருத்தாக மாறியுள்ளது.
ஆனால், அதன் பசாங்குத்தனத்தை பற்றிய அவரது அம்பலப்படுத்தல் எந்தவகையில் பொருந்தினாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை, அல்லது அந்த விடயத்துக்காக, ஹிட்லரின் கீழ் அதன் ஜேர்மன் போட்டியாளரின் கொள்கைகளை, வெறுமனே ஒரு அமைதியான உலகின் மீதான குற்றவியல் இடையூறுகளாக மட்டுமே வகைப்படுத்தவில்லை. இந்த நாடுகளின் கொள்கைகள் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகள் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு, பிலிஸ்தீனிய குணவியல்பு பண்பை விட, ஒரு வரலாற்றுத் தன்மை கொண்டதாக இருந்தது. படையெடுத்தல், இணைத்துக்கொள்ளல் மற்றும் ஆக்கிரமித்தல் கொள்கையானது தனிப்பட்ட தலைவர்களின் பைத்தியக்காரத்தனத்தில் அன்றி, ஹிட்லரைப் போன்ற ஒரு மனநோயாளி விஷயத்தில் கூட, உலகளாவிய வளங்கள் மற்றும் உலக சந்தையை அணுகுவதில் அரச எல்லைகளால் விதிக்கப்பட்ட வரம்புகளை கடந்து வெற்றிகொள்ள வேண்டிய அவசரத் தேவையிலேயே வேரூன்றி இருந்தது. ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் இடைவிடாத வளர்ச்சி, தவிர்க்கவியலாமல் உலகப் போரை நோக்கி இட்டுச் சென்றமையானது, தேசிய-அரசு அமைப்புமுறையின் வரலாற்று திவால்நிலையைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கி 1934ல் முதலில் அமெரிக்க பத்திரிகையான Foreign Affairs இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் முன்கணித்தபடி:
அந்நியச் சந்தைகளுக்கான போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூர்மையடையும். இறையாண்மையின் நன்மைகள் குறித்த புனிதமான கருத்துக்கள் உடனடியாக தூக்கி எறியப்பட்டு, தேசிய நல்லிணக்கத்திற்கான ஞானிகளின் திட்டங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும். இது, அதன் வெடிக்கும் நிலையிலான இயல் ஆற்றலுடன் ஜேர்மன் முதலாளித்துவத்திற்கும், அல்லது ஜப்பானின் தாமதமான மற்றும் பேராசை கொண்ட முதலாளித்துவத்திற்கும் மட்டுமன்றி, அதன் புதிய முரண்பாடுகள் இருந்தபோதிலும் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் பொருந்தும்.[8]
1920களின் பிற்பகுதியிலும் 1930களின் பிற்பகுதியிலும் ட்ரொட்ஸ்கியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட முரண்பாடுகள் அவற்றின் அபிவிருத்தியின் மிகவும் முன்னேறிய, உண்மையில் முடிவுக் கட்டத்தில் இப்போது உள்ளன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்தின் நலன்களுக்காக ‘உலகை ஒழுங்கமைப்பதற்கான’ உந்துதல், ஒரு உலகளாவிய வெறியாட்டத்தின் வடிவத்தை எடுத்துள்ளது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் முன்கணிக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘எரிமலை வெடிப்பு’ இப்பொழுது நன்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இராணுவவாத வெடிப்புகளின் தளமாக இருப்பது அமெரிக்க எரிமலை மட்டுமே அல்ல. சர்வதேச அளவில் இராணுவச் செலவினங்கள் பாரியளவில் அதிகரித்து வருகின்றன. போர்க் கடவுள்கள் மீண்டும் தாகத்தில் இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட இரண்டு பிரதான பெரும் சக்திகள், தங்கள் போலியான அமைதிவாத பாசாங்குகளை கைவிட்டு வருகின்றன. உக்ரேன் போரினால் வழங்கப்பட்ட வாய்ப்பை சுரண்டிக்கொண்டு, ஜேர்மன் பாராளுமன்றம் நாட்டின் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை மும்மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே ஆசியாவில் இரண்டாவது பெரிய இராணுவ சக்தியாக இருக்கும் ஜப்பான், ‘பாதுகாப்பு’ செலவினங்களில் 26.3 சதவீத அதிகரிப்பை அறிவித்துள்ளது. மூன்றாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு உலகம் எஞ்சியிருந்தால், அதன் புதிய மறுபங்கீட்டில் இருந்து சூறையாடுபவற்றை விநியோகித்துக்கொள்வதில் தாம் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அவை உறுதியாக உள்ளன.
உலகமானது ஒரு பூகோள இராணுவப் பேரழிவின் படுகுழியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது இப்போது முதலாளித்துவ ஊடகங்களில் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஒரு ‘தூண்டுதலற்ற போர்’ என்று இடைவிடாது சித்தரிக்கும் ஒரு வருட பிரச்சாரத்திற்குப் பின்னர், முதலாளித்துவ விமர்சகர்கள் இப்போது போரை மிகவும் யதார்த்தமான சர்வதேச உள்ளடக்கத்தில் வைத்துள்ளனர். பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் வெளியுறவுக் கொள்கை நிபுணரான கிதியோன் ரச்மன், சமீபத்தில் தற்போதைய நிலைமைக்கும் ‘1930கள் மற்றும் 1940களில் சர்வதேச பதட்டங்களின் அதிகரிப்புக்கும்’ இடையிலான ‘வரலாற்று சமாந்திரத்தைப்’ பற்றிக் குறிப்பிட்டார்.
சீனாவின் ஜனாதிபதி ரஷ்யாவின் தலைநகரிற்கும் ஜப்பான் பிரதமர் உக்ரேனின் தலைநகரிற்கும் ஒரே நேரத்தில் போட்டியான விஜயங்களை மேற்கொண்டனர் என்பது உக்ரேன் போரின் உலகளாவிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில் ஜப்பானும் சீனாவும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர். ஐரோப்பாவில் நடக்கும் மோதலின் விளைவால், தங்கள் போராட்டம் ஆழமாக பாதிக்கப்படும் என்பதை இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன.
உக்ரேன் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இந்த நிழல் குத்துச்சண்டை ஒரு பரந்த போக்கின் பகுதியாகும். யூரோ-அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிலான மூலோபாய போட்டிகள் ஒன்றுக்கொன்று அதிகரித்து வருகின்றன. உருவாகிக் கொண்டிருப்பது என்றவென்றால், மேலும் மேலும் ஒரே பூகோள அரசியல் போராட்டம் போல தோற்றமளிக்கும் ஒன்றாகும்.[9]
ஒவ்வொரு வரலாற்று ஆளுமையும், நிச்சயமாக, அவனது அல்லது அவளது காலத்தின் விளைபொருளாகும். ஆனால், ட்ரொட்ஸ்கி, சமகால நிகழ்வுகளில் அவரது செயலூக்கமான செல்வாக்கானது அவரது வாழ்நாளைத் தாண்டியும் விரிவடைந்துள்ள, ஒரு வரலாற்று அடையாளமாவார். கடந்த நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களின் நிகழ்வுகளைக் குறித்த நுண்ணறிவுக்காக மட்டுமல்லாமல், தற்கால நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் தலையிடுவதற்கும் அவசியமான பகுப்பாய்வுகளாகவும் அவரது எழுத்துக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சற்றே முன்னதான 1991ல் வெளியிடப்பட்ட சர்வதேச ட்ரொட்ஸ்கிசம் என்ற ஒரு பாரிய 1,124 பக்க ஆய்வில், மார்க்சிச-விரோத கல்வியாளரும் வெளிநாட்டு உறவுகள் சபையின் (Council of Foreign Relations) நீண்டகால உறுப்பினருமான, மறைந்த ரொபர்ட் ஜே. அலெக்சாண்டர், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ஒரு வெகுஜன இயக்கமாக ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்து, பின்வருமாறு எழுதினார்:
1980களின் இறுதியில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த நாட்டிலும் அதிகாரத்திற்கு ஒருபோதும் வரவில்லை. ஸ்ராலினிசத்தின் வாரிசுகளைப் போல, சர்வதேச ட்ரொட்ஸ்கிசமும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சியின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசியல் வாழ்க்கையின் ஸ்திரமின்மையுடன், பல்வேறு நாடுகளில் இந்த இயக்கத்தின் தொடர்ச்சியான இருப்பு, எதிர்காலத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான சாத்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறது.[10]
பேராசிரியர் அலெக்சாண்டரின் எச்சரிக்கையை ஆளும் உயரடுக்குகள் தீவிரமாக எடுத்துக் கொண்டன. ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியால், இடதில் இருந்து எழுந்துள்ள அரசியல் அபாயத்திற்கு விடையிறுக்கும் வகையில், ட்ரொட்ஸ்கி தொடர்பாக தொடர்ச்சியான அவதூறான போலி சுயசரிதைகளை வெளியிட்டனர். ஆனால் பேராசிரியர்களான இயன் தாட்சர், ஜெப்ரி ஸ்வைன் மற்றும் ரொபர்ட் சேர்வீஸ் ஆகியோரின் படைப்புகள், முதலாளித்துவ பத்திரிகைகளில் ஆரம்பத்தில் உற்சாகமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படுதோல்வியடைந்தன. அவர்களின் பொய்கள் அனைத்துலகக் குழுவால் பல்பூரணமான முறையில் அம்பலப்படுத்தப்பட்டன. The American Historical Review (அமெரிக்க வரலாற்று ஆய்வு), சேர்வீஸின் சுயசரிதையை ‘தரக்குறைவான வேலை’ என்ற எனது விமர்சனத்தை ‘வலுவான வார்த்தைகள் ஆனாலும் நியாயமானது’ என்று ஒப்புக்கொண்டமை, ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ரொபர்ட் சேர்வீஸ் எழுதிய வாழ்க்கை வரலாறு, அதன் வெளியீட்டாளரான ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.[11]
பல தசாப்தங்களாக, எண்ணற்ற எதிரிகளால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிலையான இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு வரலாற்றுச் சடவாத விளக்கம் உள்ளது. முதலாளித்துவம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ட்ரொட்ஸ்கியின் வாழ்நாளிலான அரசியல் நிகழ்வுகளின் பொதுவான போக்கைத் தீர்மானித்த, அடிப்படை புறநிலை பொருளாதார மற்றும் சமூக சக்திகள், வரலாற்றால் முறியடிக்கப்படவில்லை. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடானது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத வரலாற்று-மூலோபாய அடித்தளமாக உள்ளது. அவர் 1930ல் எழுதியதாவது:
தேசிய வரம்புகளுக்குள் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வது நினைத்துப் பார்க்க முடியாததாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அது உருவாக்கிய உற்பத்தி சக்திகளால் இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்களோடு சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதே ஆகும். இதிலிருந்து ஒருபுறம் ஏகாதிபத்தியப் போர்கள், மறுபுறம் ஐரோப்பாவின் ஒரு முதலாளித்துவ ஐக்கிய அரசுகளின் கற்பனாவாதம் தலைதூக்குகின்றது. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில், ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; நமது முழுப் பூமியிலும் புதிய சமுதாயத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமை அடைகிறது.[12]
நிகழ்வுகளால் முறியடிக்கப்படுவதற்குப் பதிலாக, உற்பத்தி சக்திகளின் மிகப் பரந்தளவிலான பூகோள ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த வளர்ச்சியும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ஒரு நிகழ்வுப்போக்கு என சோசலிசப் புரட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் கருத்தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. வரலாற்றின் இயக்கமானது, இப்போது மாபெரும் மார்க்சிய தத்துவ மேதை மற்றும் புரட்சியாளரின் மூலோபாய நோக்குடன் தீர்க்கமாக சந்திக்கின்றது.
தற்போதைய உலக நிலைமையை அடையாளம் கண்டுகொள்வதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் ட்ரொட்ஸ்கிக்கு எந்த சிரமமும் இருந்திருக்காது. ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிசப் புரட்சியின் அதே வரலாற்று சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக 1923ல் லெனினுக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால் உண்டான இயலாமைக்கும், அரசியல் நடவடிக்கையிலிருந்து ட்ரொட்ஸ்கி அகற்றப்பட்டதற்கும் மற்றும் 1940ல் அவரின் படுகொலைக்கும் இடையிலான பதினாறு ஆண்டுகளில், ட்ரொட்ஸ்கி கையாண்ட வரலாற்றுப் பிரச்சினைகளானவை, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட தீர்க்கப்படாத தொடர்ந்து நிலவுகின்ற அரசியல் பிரச்சினைகளாக இன்னமும் உள்ளன: அவையாவன, ஏகாதிபத்தியப் போர், ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் பாசிசத்தின் மீளெழுச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், வெகுஜன வேலையின்மை, வறுமை, தற்போதுள்ள வெகுஜன தொழிலாளர் அமைப்புகளின் துரோகம் மற்றும் இந்த தொழிலாளர் அமைப்புகள் முதலாளித்துவ அரச கட்டமைப்புகளில் ஒருங்கிணைந்துகொள்வது ஆகியவைகளாகும்.
இந்த 2023 ஆம் ஆண்டானது சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்ட நூற்றாண்டைக் குறிக்கிறது. 1923 இலையுதிர்காலத்தில், சோவியத் அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டிலும் அதிகாரத்துவத்தின் வளர்ச்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் ஆரம்ப பொது விமர்சனமானது, இருபதாம் நூற்றாண்டின் மிகவும் அரசியல் ரீதியிலான விளைவுகளைக் கொண்ட போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஸ்ராலின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைவிதிக்கும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துவத்திற்கு அடிபணியச் செய்வது, தொழிலாளர்களின் ஜனநாயகத்தின் அனைத்து வடிவங்களையும் அழிப்பது, இறுதியாக, சோவியத் ஒன்றியத்திற்குள் மார்க்சிஸ்டுகளை சரீர ரீதியாக அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய, இந்த பலவந்தக் கைப்பற்றல், ‘தனி ஒரு நாட்டில் சோசலிசம்’ என்ற ஸ்ராலினிச கோட்பாட்டைக் கொண்டு அரசியல் ரீதியில் நியாயப்படுத்தப்பட்டது. முதலும் முக்கியமுமாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட இந்தப் போலித்-தத்துவம், அக்டோபர் புரட்சி அடித்தளமாகக் கொண்டிருந்த சர்வதேச சோசலிச முன்னோக்கை மறுதலிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் குறித்த ஒரு ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு தொகுதி பின்வரும் வலியுறுத்தலுடன் தொடங்குகிறது: ‘லியோன் ட்ரொட்ஸ்கி அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்களில், வேறு எதையும் விட அதிகமாக அக்கறை கொண்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினையாக சோவியத் அதிகாரத்துவத்தின் பிரச்சினை இருந்தது.'[13]
இந்தக் கூற்று அடிப்படையில் தவறானது. ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, சோவியத் அதிகாரத்துவத்தின் பிரச்சினையானது, புரட்சிகர சர்வதேசியவாதப் பிரச்சினைக்கு முற்றிலும் இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. உண்மையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உண்மையான தன்மையை, சர்வதேச வர்க்கப் போராட்டத்துடனும் உலக சோசலிசத்தின் தலைவிதியுடனுமான சோவியத் ஒன்றியத்தின் உறவின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகளின் நிலைமைகளின் கீழ், போல்ஷிவிக் கட்சிக்குள் தோன்றிய ஒரு போக்காக, ஸ்ராலினிசம் மார்க்சிச சர்வதேசியவாதத்திற்கு எதிரான ஒரு தேசியவாத பிற்போக்குத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு சற்றே ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியது போல், ‘தத்துவார்த்த தளத்தில் எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த ஸ்ராலினிசமும், 1905ல் சூத்திரப்படுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான விமர்சனத்திலிருந்து வளர்ந்தது என்று கூறலாம்.'[14]
அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது. அதே மூலோபாயக் கொள்கையானது தற்போதைய உலகச் சூழ்நிலைமையில் அனைத்து அரசியல் பணிகளுக்கும் பொருந்தும். சமகால சகாப்தத்தின் பெரும் பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வுகள் எதுவும் கிடையாது.
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடானது, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் அடித்தளமாகக் கொண்டுள்ள சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் புறநிலை இயக்க ஆற்றல் குறித்த பகுப்பாய்வை வழங்கியது. ஆனால் சோசலிசத்தின் வெற்றியானது முதலாளித்துவ முரண்பாடுகளின் தானியங்கித் தீர்வின் மூலம் அடையப்படமுடியாது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். இந்த முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புறநிலை நிலைமைகளையும் சாத்தியத்தையும் மட்டுமே உருவாக்குகின்றன. ஆனால் சாத்தியத்தை யதார்த்தமாக மாற்றுவது, புரட்சிகர கட்சியின் நனவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் சார்ந்திருந்தது.
நான்காம் அகிலத்தின் 1938 ஸ்தாபக ஆவணத்தில், ‘மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகர தலைமையின் நெருக்கடியாக குறைக்கப்பட்டுவிட்டது’ என்ற ட்ரொட்ஸ்கியின் பிரகடனம், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளதும் தொழிற்சங்கங்களினதும் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்தின் விளைவாக, தொழிலாள வர்க்கம் அனுபவித்த முந்தைய பதினைந்து ஆண்டுகால தோல்விகளின் மைய படிப்பினைகளின் சுருக்கமாகும்.
1926ல் பிரிட்டனில் பொது வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டமை, 1927ல் சியாங் கை ஷேக், ஷாங்காய் தொழிலாள வர்க்கத்தை நசுக்கியமை, 1933ல் ஜேர்மனியில் நாஸிக்களின் வெற்றி, 1936 வெகுஜன வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை மக்கள் முன்னணியின் அரசியலால் விரக்திக்குள்ளாக்கியமை போன்ற நிகழ்வுகள், 1939ல் ஸ்பானியப் புரட்சியின் தோல்வி, மற்றும் இறுதியாக ஹிட்லருடனான ஸ்ராலினின் உடன்படிக்கை மற்றும் இரண்டாம் உலகப் போர் வெடித்தமையும் இடதுசாரி புத்திஜீவிகளின் பரந்த பிரிவுகள் மத்தியில், சோசலிசத்திற்கான வாய்ப்புகள் குறித்த அவநம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் தூண்டிவிட்டன. இந்தத் தோல்விகள் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தை வென்று தக்கவைத்துக் கொள்ள இயலாது என்பதை நிரூபிக்கவில்லையா என்று அவர்கள் கேட்டார்கள்.
இக்கேள்வியைத் தூண்டிவிட்ட விரக்தியை ட்ரொட்ஸ்கி ஆணித்தரமாக நிராகரித்தார். சோசலிசத்தை அடைவதற்கான தடையாக இருந்தது தொழிலாள வர்க்கத்தின் ‘புரட்சிகரமற்ற’ தன்மை அல்ல, மாறாக, தற்போதுள்ள வெகுஜனக் கட்சிகளின் அழுகிய தன்மையே ஆகும். எனினும் இது மேலும் ஒரு கேள்வியை எழுப்பியது: அதாவது புரட்சியின் கோரிக்கைகளுக்கு இணையான தலைவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா? இந்த சாத்தியத்தை மறுத்தவர்கள் மிகவும் அவநம்பிக்கையான அரசியல் முடிவுகளுக்குத் தள்ளப்பட்டனர், உதாரணமாக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டமானது ஒரு நம்பத்தகாத கற்பனாவாதத்தை வளர்த்தது என்றும், மனிதகுலத்தின் நிலையானது சாராம்சத்தில் நம்பிக்கையற்றது என்றும் கூறினர். 1939 இலையுதிர்காலத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: ‘எமது எதிரிகள் அனைவரும் இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. என்றாலும், தீவிர இடதுகள், மத்தியவாதிகள் மற்றும் அராஜகவாதிகளுமாக -ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளைக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை- அவர்கள் அனைவரும், தோல்விகளுக்கான பொறுப்பை தங்களிடமிருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றுகிறார்கள். அவர்களில் எவரும், பாட்டாளி வர்க்கமானது எந்த நிலைமைகளின் கீழ் சோசலிச வெற்றியை சாதிக்க முடியும் என்பதை துல்லியமாகக் குறிப்பிடவில்லை.'[15]
ட்ரொட்ஸ்கி இடது புத்திஜீவிகளின் அரசியல் விரக்தியின் மூலத்தை அடையாளம் கண்டுகொண்டிருந்தார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலை நிராகரிப்பதுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய குட்டி முதலாளித்துவ இடது கல்வியாளர்களின் மார்க்சிச-விரோதத்தின் இன்றியமையாத அடிப்படையாக இருந்தது. ட்ரொட்ஸ்கியின் வரலாற்று முன்னோக்கிற்கு எதிராக தங்கள் வாதங்களை திசை திருப்பிய (அவர்கள் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட), பிராங்போர்ட் பள்ளியானது மார்க்சிசத்தை தொழிலாள வர்க்கத்திடமிருந்து துண்டிக்க முயன்றது. பின்நவீனத்துவவாதிகள், வரலாற்றை ஒரு புறநிலை விதிகளால் ஆளப்படும் நிகழ்முறையாக விளக்கிய மற்றும் தொழிலாள வர்க்கத்தை சமூகத்தின் மைய புரட்சிகர சக்தியாக அடையாளம் காட்டிய ‘பெரும் கதையாடல்கள்’ முடிவடைந்துவிட்டதாக அறிவித்தனர். மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சியையும் முற்றிலுமாக நிராகரிப்பதே, சமூக சிந்தனையில் காணப்படும் பிற்போக்கின் தவிர்க்கவியலாத விளைவாக இருந்தது. இந்த பிற்போக்கின் இரண்டு முன்னணி பிரதிநிதிகளாக, எர்னஸ்டோ லாக்லாவ் மற்றும் சாண்டெல் மூப்வ், 1985 ஆண்டில் அப்பட்டமாக பின்வருமாறு அறிவித்தனர்:
இந்தப் புள்ளியில் நாம் இப்போது மார்க்சியத்திற்குப் பிந்தைய தளத்தில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். மார்க்சியத்தால் விரிவுபடுத்தப்பட்ட அகநிலை மற்றும் வர்க்கங்கள் குறித்த கருத்தாக்கத்தையோ அல்லது முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுப் போக்குக் குறித்த அதன் பார்வையையோ இனியும் பேணுவது சாத்தியம் இல்லை…[16]
மார்க்சிய எதிர்ப்புத் தத்துவவாதிகள் நிகழ்வுகளால் மறுதலிக்கப்பட்டுள்ளனர். ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியை முன்கணித்துத் தயாரிப்புச் செய்துள்ளது. நிரந்தரப் புரட்சி முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துலகக் குழுவானது 1988 ஆண்டில் கூறியதாவது:
பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடுத்த கட்டமானது, புறநிலைப் பொருளாதாரப் போக்குகளதும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கினதும் ஒருங்கிணைந்த அழுத்தத்தின் கீழ், ஒரு சர்வதேச பாதையில் தவிர்க்கவியலாமல் அபிவிருத்தியடையும் என்று நாங்கள் முன்கணிக்கின்றோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்துக் கொள்ள மேலும் மேலும் முனையும்; மார்க்சிச சர்வதேசியவாதிகளின் கொள்கைகள் இந்தக் கூட்டிணைந்த போக்கின் வெளிப்பாடாக இருப்பதுடன் அவர்கள் இந்த நிகழ்வுப் போக்கை அபிவிருத்தி செய்து அதற்கு நனவான வடிவம் கொடுப்பார்கள்.[17]
துரிதமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும் சோசலிசப் புரட்சிக்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்குமான புறநிலை நிலைமைகளை வழங்கும். ‘ஆனால்,’ ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போல், ‘புரட்சிகரக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பொறுப்பில் நிற்காத வரை, இந்த மாபெரும் வரலாற்றுப் பிரச்சினை எந்த வகையிலும் தீர்க்கப்படாது.’
நிகழ்ச்சி வேகங்கள் மற்றும் கால இடைவெளிகள் குறித்த கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அது பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது நமது கொள்கையின் திசையையோ மாற்றவில்லை. முடிவு எளிமையான ஒன்றாக இருக்கிறது: அதாவது பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்கு பத்து மடங்கு ஆற்றலுடன் கல்வியூட்டும் மற்றும் ஒழுங்கமைக்கும் பணியை முன்னெடுக்க வேண்டியது அவசியம். இதிலேயே நான்காம் அகிலத்தின் பணி துல்லியமாக அடங்கியுள்ளது.[18]
கடந்த நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதாகக் கூறிக்கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்கள், கட்சிகள் மற்றும் போக்குகளை முழுமையாகப் பரிசோதித்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்டுகள், முதலாளித்துவ தேசியவாதிகள், அராஜகவாதிகள் மற்றும் பப்லோவாதிகளின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளன. அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலம் மட்டுமே வரலாற்றின் பரிசோதனையை எதிர்கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு கண்டத்திலும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர சோசலிச இயக்கமானது இருபத்தியோராம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தில் அபிவிருத்தியடையும்.
* * * *
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினரும், முப்பத்தைந்து ஆண்டுகளாக அதன் இலங்கைப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தவருமான விஜே டயஸின் (27 ஆகஸ்ட் 1941 – 27 ஜூலை 2022) நினைவாக இத்தொகுப்பு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தோழர் விஜே தனது இளமைக் கால இலட்சியங்களை முதுமையிலும் நிலைநிறுத்தி, குறைவில்லாத ஆர்வத்துடன் போராட்டத்தின் நடுவே உயிர் துறந்தார். தைரியம், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சோசலிசத்திற்கான பற்றுறுதியுடனான அவரது மரபுவழி, மனிதகுலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் மாபெரும் வர்க்கப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உத்வேகமூட்டும் உதாரணத்தை வழங்கும்.
டேவிட் நோர்த், டெட்ரொயிட் 4 ஏப்ரல் 2023
[1] International Committee of the Fourth International, What Is Happening in the USSR: Gorbachev and the Crisis of Stalinism (Detroit: Labor Publications, 1987), p. 12.
[2] David North, Perestroika Versus Socialism: Stalinism and the Restoration of Capitalism in the USSR (Detroit: Labor Publications, 1989) p. 49.
[3] The National Interest, 19 (Summer 1989), p. 3.
[4] The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International (The Transitional Program), https://www.marxists.org/archive/trotsky/1938/tp/tp-text.htm#op
[5] The Third International After Lenin (Section 2: The United States and Europe), https://www.marxists.org/archive/trotsky/1928/3rd/ti01.htm#p1-02
[6] “War and the Fourth International,” June 10, 1934, https://www.marxists.org/archive/trotsky/1934/06/warfi.htm
[7] “Order Out of Chaos,” https://www.marxists.org/archive/trotsky/1919/xx/order.html
[8] “Nationalism and Economic Life,” https://www.marxists.org/archive/trotsky/1934/xx/nationalism.htm
[9] “China, Japan and the Ukraine war,” Financial Times, March 27, 2023.
[10] Robert J. Alexander, International Trotskyism 1929-1985: A Documented Analysis of the Movement (Durham and London: Duke University Press, 1991) p. 32.
[11] Review by Bertrand M. Patenaude in The American Historical Review, Vol. 116, No. 3 (June 2011), p. 902; also cited in In Defense of Leon Trotsky, by David North (Oak Park, MI: Mehring Books, 2013), pp. 243-48.
[12] Leon Trotsky, “What is the Permanent Revolution?,” The Permanent Revolution, https://www.marxists.org/archive/trotsky/1931/tpr/pr10.htm
[13] Thomas M. Twiss, Trotsky and the Problem of Soviet Bureaucracy (Chicago: Haymarket Books, 2014), p. 1.
[14] “Three Conceptions of the Russian Revolution,” (1939), https://www.marxists.org/archive/trotsky/1939/xx/3concepts.htm
[15] “The USSR in War,” In Defense of Marxism, https://www.marxists.org/archive/trotsky/1939/09/ussr-war.htm
[16] Ernesto Laclau and Chantelle Mouffe, Hegemony & Socialist Strategy: Toward a Radical Democratic Politics (London and New York: Verso) p. 4.
[17] David North, Report to the 13th National Congress of the Workers League, Fourth International, July-December 1988, p. 39.
[18] Manifesto of the Fourth International on Imperialist War (1940), https://www.marxists.org/history/etol/document/fi/1938-1949/emergconf/fi-emerg02.htm